சுடச்சுட

  

  சபரிமலையின் பாரம்பரியம் மாறக்கூடாது: இலங்கை எம்.பி. சீனுத்தம்பி யோகேஸ்வரன்

  By DIN  |   Published on : 01st January 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சபரிமலைக்கு என உள்ள பாரம்பரியம் மாறக் கூடாது, அது பேணப்பட வேண்டும் என்றார் இலங்கை தமிழ் எம்.பி. சீனுத்தம்பி யோகேஸ்வரன். 
  இலங்கை தமிழ் தேசியக் கட்சியை சேர்ந்த சீனுத்தம்பி யோகேஸ்வரன் மட்டக்களப்பு எம்.பி.யாக இருக்கிறார். சபரிமலைக்கு நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்த அவர், சபரிமலைக்குச் சென்று விட்டு திங்கள்கிழமை மாலை நாமக்கல் திரும்பி,  ஐயப்பன் கோயிலில் விரதத்தை முடித்து சுவாமி தரிசனம் செய்தனர். 
   அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  இலங்கைத் தமிழர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர்கள் மறைந்த பிரதமர்கள் இந்திரா காந்தியும், ராஜீவ்காந்தியும் தான்.  இதனை தமிழ் மக்கள் மறக்கவில்லை. அதற்கு பின்னர் இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ்,  பாஜக அரசுகள் இலங்கை தமிழ் மக்கள் நலனில் பெரிய அளவில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.  
   இப்போது இலங்கையில் நடைபெற்ற அரசியல் குழப்பத்தின்போதும் இந்தியா மெளனமாகத்தான் இருந்தது.  ஆனாலும், நாங்கள் எங்கள் தாய் நாட்டுக்கு இணையாக இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கிறோம்.   இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை இந்தியா பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கிறோம். 
  இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஜக்கிய நாடுகள் சபையில் வரும் மார்ச் மாதம் விசாரணை நடைபெறவுள்ளது.  அப்போது இலங்கை அரசு இதற்கு பதில் அளித்து ஆக வேண்டும்.      மீனவர் பிரச்னைக்கு இரண்டு அரசுகளும் சேர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்.  சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது குறித்த நீதிமன்ற தீர்ப்பில் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. இருப்பினும், சபரிமலைக்கு என உள்ள பாரம்பரியம் மாறக் கூடாது,  அது பேணப்பட வேண்டும் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai