சுடச்சுட

  

  சாதி மோதலை தூண்டும் பேச்சு: குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க விசிக கோரிக்கை

  By DIN  |   Published on : 01st January 2019 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாதி மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி சமூக வலைதளங்களில் பரப்பிய லாரி ஓட்டுநர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
  அக் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலர் பழ.மணிமாறன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டம்,  பரமத்திவேலூர் அருகே பாலப்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் தன்னுடைய சாதியைக் குறிப்பிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை மிகவும் மோசமாக பேசி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.   மேலும் அந்தப் பதிவில் சாதியைச் சொல்லி இழிவாகச் பேசியதோடு, திருமாவளவன் தயாரையும் இழிவாகப் பேசியுள்ளார். 
  இதுபோன்ற  பேச்சால் சமூக நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளது.   ஒடுக்கப்ட்ட சாதிகளைச் சொல்லி இழிவாகப் பேசி, சாதி வன்முறையைத் தூண்ட முயற்சி செய்த பாலப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநரான செழியன் என்பவரை குண்டர் தடுப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai