சுடச்சுட

  

  நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் அருகேயுள்ள வடுகம் பகுதியில் தாய் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. 
  வடுகம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (36) . ராசிபுரத்தில் ஆட்டோ ஒட்டுநராக உள்ளார்.  இவரது மனைவி சரஸ்வதி,  விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.  இவர்களுக்கு நவீன் கிஷோர் (13),  கோகிலா (17) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.  இதில் நவீன்கிஷோர் பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பிலும், கோகிலா தனியார் கலைக் கல்லூரியில் முதலாமாண்டிலும் பயின்று வருகின்றனர். 
  இவர்களது வீடு வடுகம் பகுதியில் உள்ள குட்டக்கரை என்ற இடத்தில் உள்ளது.  இந்நிலையில், நவீன் கிஷோருக்கு பள்ளி விடுமுறை என்பதால்,  விவசாய கூலி வேலைக்கு தனது தாயுடன் சென்றுள்ளார். அங்கு கதிரேசன் என்பவரின் தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்துள்ளார்.  சிறுவனின் இச் செயலை அவரது தாய் சரஸ்வதி கண்டித்து  அடித்துள்ளார்.  இதனால் கோபமடைந்த நவீன் கிஷோர் தனது வீட்டுக்குச் சென்று மின்விசிறியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  
  இதனை அப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்து தகவல் கொடுத்துள்ளனர்.  வீட்டுக்குச் சென்ற தாய் சரஸ்வதி இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், நவீன்கிஷோர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai