சுடச்சுட

  

  நாமக்கல்லில் உள்ள தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். 
  நாமக்கல் பொய்யேரிக்கரையில் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  பள்ளியின் முதல் மாடியில் ஓட்டு வில்லைக் கட்டடங்கள் உள்ளன.  இந்த கட்டடத்தில் திங்கள்கிழமை பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  தகவலறிந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஏ.பொன்னுசாமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
  இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறியது,  பள்ளியின் முதல் மாடியில் இரு ஓட்டு வில்லைக் கட்டடங்கள் உள்ளன.  அங்கு வகுப்பு எதுவும் செயல்படவில்லை.  மரச் சாமான்கள் போட்டு வைக்கப்பட்டுள்ளன.  பள்ளி விடுமுறை என்பதால்,  மாணவர்கள் யாரும் இல்லை.   தீப்பற்றிய சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தணைக்கப்பட்டது என்றனர். சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai