சுடச்சுட

    

    ராசிபுரம் நகராட்சி 27-வது வார்டு பகுதியில் திமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக உறுப்பினர்களுக்கு வீடுகள் தோறும் சென்று புதிய அட்டை வழங்கும் பணி 27-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட திமுக முன்னாள் துணை அமைப்பாளர் வி.பாலு பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு அட்டைகள் வழங்கினார். 
     மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பி.மோகன்தாஸ், வார்டு செயலாளர் கேசவன், வார்டு பிரதிநிதி மோகன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai