சுடச்சுட

  

  தைப்பூசம் அன்று நாமக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
  நாமக்கல் ஆன்மிக இந்து சமயப் பேரவைத் தலைவர் வழக்குரைஞர் கே.மனோகரன்,  சுற்றுலா மற்றும் கலாசார ஆய்வாளர் ஆர்.பிரணவகுமார், பாஜக மகளிரணி மாநிலச் செயலர் ரோகிணி உள்ளிட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரம், மோகனூர், கபிலர்மலை, காளிப்பட்டி, பாலப்பட்டி, தத்தகிரி, கந்தகிரி, பேளுக்குறிச்சி, படையத்தான்குட்டை,  வையப்பமலை, குருசாமிபாளையம்,  கருங்கல்பாளையம், பில்லிக்கல்பாளையம்,  திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் முருகன் கோயில்கள் உள்ளன.  இந்த முருகன் கோயில்களில் தைப்பூச விழா மிகவும் கோலாகலாமாக கொண்டாடப்படும்.  தைப்பூச நாளில் பக்தர்கள் விரதம் இருந்து நடைபயணம்,  காவடி, பால்குடம் என பல்வேறு வகைகளில் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் தைப்பூச நாளில் முருகன் கோயில்களுக்குசச் சென்று தரிசனம் செய்ய, அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai