சுடச்சுட

  

  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க புதிய கட்டடம்: அமைச்சர் திறந்து வைத்தார்

  By DIN  |   Published on : 01st January 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விட்டம்பாளையத்தில்  ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிநவீன கட்டடத்தை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி திங்கள்கிழமை  திறந்து வைத்தார்.
  1930 இல் ஆரம்பிக்கப்பட்ட விட்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தற்போது 2605 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கம் துவங்கிய காலத்திலிருந்து பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
  இக் கட்டடத்தை மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்,  திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி, சுப்ரமணியம், திருச்செங்கோடு வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் . மூர்த்தி,உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் கூட்டுறவு சங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணியாற்றிய முத்துசாமி என்ற ஓட்டுநருக்கு அமைச்சர் தங்கப் பதக்கம் அணிவித்து கெளரவப்படுத்தினார்.  பின்னர் பத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு விவசாயக் கடனுக்கான காசோலை வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai