சுடச்சுட

  

  நாமக்கல்லில் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்

  By DIN  |   Published on : 01st January 2019 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து நாமக்கல் நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். 
  தமிழகம் முழுவதும் நெகிழி பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.  நெகிழிக்கு  மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  பிளாஸ்டிக் பை பயன்பாட்டைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
   இந் நிலையில்,  நாமக்கல் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) என். கமலநாதன் உத்தரவின்படி,  நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.  நாமக்கல் பேருந்து நிலையம், நந்தவனத் தெரு, பூங்கா சாலை என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.  பிரசாரத்தின்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.  மேலும்,  கடைகளில் வைக்கப்பட்டிருந்த நெகிழிப் பைகளும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.  நகராட்சி அதிகாரிகள்,  துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai