சுடச்சுட

  

  நாமக்கல்லில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
  நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தைச் சேர்ந்தவர்  திருமூர்த்தி((45).  விவசாயி.  இவர் குடும்பத்துடன் நாமக்கல் தில்லைபுரம் 3ஆவது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.  இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், திருமூர்த்தி, அவரது மனைவி ஜெயந்தி,  மகள் திஷா ஆகியோரை அழைத்துக் கொண்டு சேந்தமங்கலம் சென்றுவிட்டார்.  அவரது மகன் நகுலன் நாமக்கல்லில் உள்ள அவரது அத்தை நிர்மலா வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
  இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் பள்ளிக்குச் செல்வதற்காக சீருடை அணிய நகுலன், தில்லைபுரத்தில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார்.  அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு,  கதவு திறந்து கிடந்துள்ளது. மேலும் வீட்டுக்குள் இருந்த 3 பீரோகளும் திறந்து கிடந்ததோடு, அதில் இருந்து துணிகளும் கலைந்து கிடந்தன. இதுகுறித்து நகுலன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.  பின்னர் திருமூர்த்தி அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.  9 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூ.6,000 திருட்டுப் போயுள்ளதாக திருமூர்த்தி தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai