சுடச்சுட

  

  தமிழ்நாடு மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை மாலை நடந்தது.
  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநிலத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.  திட்டச் செயலர் கணேசன்,  மாவட்ட தலைவர் பாலசாரதி, பொருளாளர் கவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
   கஜா, வர்தா, ஒக்கி ஆகிய புயல் பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொண்டு பிறகு கண்டு கொள்வதில்லை.  ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.  ராசிபுரம் கோட்ட செயலர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai