சுடச்சுட

  

  ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

  By DIN  |   Published on : 01st January 2019 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகம் முழுவதும் ஜன.1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,  ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு,  இதனை பயன்படுத்துவதற்கான தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
  தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.  இதனையடுத்து கேரிபேக், டீ கப், பிளாஸ்டிக் பைகள் போன்றவை பயன்படுத்திட தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து பொதுமக்கள், வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பெ.நடேசன் தலைமையில், துப்புரவு அலுவலர் ஏ.டி.பாலகுமாரராஜூ, துப்புரவு ஆய்வாளர்கள் ரா.பாஸ்கரன், ஏ.லோகநாதன்,  தூய்மை பாரத் திட்ட மேற்பார்வையாளர் சு.பிருதிவிராஜ் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் ராசிபுரம் நகரில் பெரிய கடைவீதி,  சின்னக்கடைவீதி, பூக்கடை வீதி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். 
  மேலும் ஜன.1 முதல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  மேலும் இதனைப் பயன்படுத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai