சுடச்சுட

  

  ராஜா வாய்க்காலின் குறுக்கே இரும்பு பாலம் அமைப்பதை தடுக்க கோரிக்கை

  By DIN  |   Published on : 01st January 2019 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பரமத்தி வேலூர் அருகே முறைகேடாக  மணல் கடத்த ராஜா வாய்க்காலின் குறுக்கே இரும்பு பாலம் அமைப்பதை மாவட்ட நிர்வாகம்  தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
   பரமத்தி வேலூர் ராஜா வாய்க்கால் விவசாய சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:  பொன்மலர்பாளையத்தில் ராஜா வாய்க்காலின் குறுக்கே காவிரி ஆற்றில் இருந்து மணலை முறைகேடாக கடத்துவதற்காக இரும்பு பாலம் அமைப்பதற்கான முயற்சியல் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனை தடுக்க அம் மனுவில் கூறப்பட்டுள்ளது.  இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் வினோத்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:  ராஜா வாய்க்காலில் குறுக்கே தனியார் பாலம் அமைக்க அனுமதி கோரியிருந்தனர்.  ஆனால் இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai