சுடச்சுட

  

  விவேகானந்தா கல்லூரியில் தொல்லியல் குறித்த கருத்தரங்கம்

  By DIN  |   Published on : 01st January 2019 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தொல்லியல், அகழாய்வு குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை   நடைபெற்றது.
  கருத்தரங்கில்  ராமநாதபுரம் மாவட்ட காப்பாட்சியர் முனைவர் ஆசைத்தம்பி கருத்துரை
  ஆற்றினார்.  இக் கருத்தரங்கில் கல்லுரியின் தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.   தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற முக்கிய அகழாய்வுகளான ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி அகழாய்வுகள் அதன் வழி வெளிப்பட்ட வரலாற்றுப் பதிவுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. கோயில் மற்றும் அருங்காட்சியகங்களைப் பாதுகாப்பது இளைய தலைமுறையின் கடமை,  எக்காரணம் கொண்டும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைச் சேதப்படுத்துவது,  சுவர்களில் கிறுக்குவது எழுதுவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது. 
  வரலாற்றை ஒவ்வொரு தமிழனும் முயன்று படிக்க வேண்டும்.  இல்லையானால் நமது பெருமைமிகு தமிழ் வரலாற்றை இழந்து விடும் அபாயம் இருக்கிறது என்பது போன்ற கருத்துகள் மாணவிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. 
  இக் கருத்தரங்கத்திற்கு தாளாளர்  முனைவர் மு.கருணாநிதி தலைமை வகித்தார்.  நிர்வாக இயக்குநர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.  முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம்,  அட்மிசன் இயக்குநர் வரதராஜு,  கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் புல முதன்மையர் அருணா, புல முதன்மையர் குமரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  துறைத் தலைவர் கற்பகராமன் நன்றியுரை வழங்கினார்.  கருத்தரங்கை உதவிப் பேராசிரியர் முனைவர் கருமுருகானந்தராஜன் ஒருங்கிணைத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai