சுடச்சுட

  

  ராசிபுரம் எஸ்ஆர்வி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவர் எம்.குமரவேல் தலைமை வகித்தார். செயலர் பி.சுவாமிநாதன் வரவேற்றார். பள்ளி துணைத் தலைவர் ஏ.ராமசாமி, பொருளாளர் எஸ்.செல்வராஜன், அறங்காவலர் ஏ.ஆர்.துரைசாமி, துணைச்செயலர் பி.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
  விழாவில் பள்ளியின் பயின்று இந்திய வருவாய் பணியில் தேர்வு பெற்று சுங்கம் மற்றும் கலால் துறையில் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றும் பூ.கொ.சரவணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார். விழாவில் பேசிய அவர், மாணவர்கள் தங்களது எண்ணத்திற்கு செயலாக்கம் கொடுக்க தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இதனால் எதையும் சாதிக்க முடியும்.
  நல்ல பண்புகள், புத்தகம் பயிலும் ஆர்வம், சுய கட்டுப்பாடு, உத்வேகம், சிந்திக்கும் ஆற்றல் போன்றவற்றை வளர்த்துக்கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். திருவள்ளுவரின் திருக்குறள் வரிகளைப் பின்பற்றி செயல்பட்டால், சுய ஒழுக்கம் மேம்படும் என்றார். 
  விழாவில் பொய்கால் நடனம், கராத்தே, மீம்ஸ், யோகா போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai