சுடச்சுட

  


  பரமத்தி வேலூரை அடுத்த வேலகவுண்டம்பட்டி அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூரைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஜெயக்குமார் (24), கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
  இவர் திங்கள்கிழமை இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் செவ்வாய்கிழமை வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அவர் அக்கலாம்பட்டி அருந்ததியர் காலனி அருகே உள்ள ஒரு கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின்பேரில் வேலகவுண்டம்பட்டி போலீஸார் அங்கு சென்று, ஜெயக்குமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் ஜெயக்குமார் கிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்து மது அருந்தியதாகவும், நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai