சுடச்சுட

  


  வையப்பமலையில் இயங்கி வரும் தனியார் வங்கிக் கிளையில் ஏற்பட்ட தீ விபத்தில், பொருள்கள் சேதம் அடைந்தன.
  திருச்செங்கோடு அருகேயுள்ள வையப்பமலையில் உள்ள தனியார் வங்கிக் கிளையில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் கரும்புகை வெளிவந்துள்ளது.
  இதையறிந்த கிராம மக்கள்அளித்த தகவலின்பேரில், ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
  இதைத் தொடர்ந்து, வங்கியின் மேலாளர் சமீர் உள்ளே சென்று பார்த்தபோது, கணினிகள், குளிர்சாதனப் பெட்டிகள், தளவாடப் பொருள் தீயில் கருகி எரிந்துள்ளன. ஆனால், பணமும், அடமான நகைகள் தீ விபத்தில் சேதமடையவில்லை.
  தீ விபத்துக்கான காரணம் குறித்து எலச்சிபாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai