சுடச்சுட

  


  மக்கள் நீதி மய்யத்தின் ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
  ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.மணி தலைமை வகித்தார். நிர்வாகி நவாஸ்பாபு வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மத்திய மாவட்டப் பொறுப்பாளர் ஜெ.பி.ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் ஆர்.டி.பாரத்மணி, எஸ்.அருள்பாபு, பொன்.பாலசந்திரன், கார்த்தி, சதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர்களாக நவாஷ்பாபு, கோமதி முருகேசன், வெண்ணந்தூர் கார்த்திகேயன் ஆகியோரும், சேந்தமங்கலம் தொகுதி பொறுப்பாளர்களாக நாமகிரிப்பேட்டை முருகானந்தம், கொல்லிமலை ரவிச்சந்திரன் ஆகியோரும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai