மது அருந்த மாட்டோம்' போலீஸார் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில், இனி மேல் மது குடிக்க மாட்டோம்- குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டோம்' என்று மது அருந்தும்


ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில், இனி மேல் மது குடிக்க மாட்டோம்- குடித்துவிட்டு வாகனம் ஓட்ட மாட்டோம்' என்று மது அருந்தும் பழக்கம் உள்ளோரிடம் போலீஸார் சத்தியம் வாங்கி உறுதிமொழி ஏற்கவைத்தனர்.
மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு, உடலுறுப்பு சேதம் குடும்பத்தின் அமைதி, பொருளாதாரத்தைச் சீரழிப்பதோடு, எதிர்காலத்தையும் பாதித்து வருகிறது. 
இந்த நிலையில், ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் திங்கள்கிழமை நள்ளிரவில் குமாரபாளையத்தை அடுத்த கோட்டைமேடு பிரிவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விபத்தில்லா ஆண்டாக அமைய காவல்துறை சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது . 
குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் தேவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் ஆடல், பாடலுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். 
இதையடுத்து, விபத்தில்லா ஆண்டாக அமையும் வகையில் ஒவ்வொருவரும் இனிமேல் மது அருந்த மாட்டோம், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்ட மாட்டோம். எங்கள் குடும்ப நலனுக்காகவும் புத்தாண்டு நாளிலிருந்து மது அருந்த மாட்டோம்' என பலரும் போலீஸாரின் முன்னிலையில் உறுதியேற்றுக் கொண்டு சத்தியம் செய்தனர். 
இவ்வாறு உறுதியேற்றோருக்கு காவல்துறை சார்பில் மாலை அணிவித்து, பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஏற்படும் விபத்துகள், பாதிப்புகள், செல்லிடப் பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்து குறித்தும் காணொளி மூலம் காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com