சுடச்சுட

  

  ஜன. 5-இல் அனுமன் ஜெயந்தி: 1,00,008 வடை தயாரிக்கும் பணி தொடக்கம்

  By DIN  |   Published on : 03rd January 2019 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வரும் 5-ஆம் தேதி 1 லட்சத்து 8 வடை மாலை சார்த்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயிலில் வடை தயாரிக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
  நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது. 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 1 மணிக்கு தங்கக் கவச சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெறும். 
  இதையொட்டி, 1 லட்சத்து 8 வடை தயாரிக்கும் பணி அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த 32 பேர் கொண்ட குழுவினர், வடை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
  இதுகுறித்து ஸ்ரீரங்கம் மடப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் தெரிவித்தது: அனுமன் ஜெயந்திக்காக 1 லட்சத்து 8 வடை தயாரிக்க 2,250 கிலோ உளுத்தம் மாவு பயன்படுத்தப்படுகிறது. 650 கிலோ நல்லெண்ணெய், 35 கிலோ சீரகம் மற்றும் 35 கிலோ மிளகு, 35 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. மொத்தம் 18 அடுப்புகள் அமைத்து வடை தயாரிக்கப்படுகிறது.
  தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த பணி நடைபெறுகிறது. வடைகள் தயாரிக்கப்பட்டு நூல் கயிற்றில் கோர்க்கப்பட்டு, 5-ஆம் தேதி காலை 5 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சார்த்தப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai