சுடச்சுட

  

  எருமப்பட்டியில் பிப்ரவரி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
  நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் புதன்கிழமை அளித்த மனு விவரம்: எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா கடந்த மே 26-ஆம் தேதி எந்தவித அசம்பாவிதமும் இன்றி, சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.
  அதேபோல், நிகழாண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இதனால், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி எருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai