சுடச்சுட

  

  பாவை பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

  By DIN  |   Published on : 03rd January 2019 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் பாவை பாலிடெக்னிக் கல்லூரியில், இறுதியாண்டு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அண்மையில்
  நடைபெற்றது.
  இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். கல்வி நிறுவன முதன்மையர் கே.செல்வி வரவேற்றார். தாளாளர் மங்கை நடராஜன், இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பன்னாட்டு ஜேசீஸ் பயிற்சியாளர் ஜே.கார்த்திக் தலைமையிலான குழுவினர் சிறப்பு பயிற்சியாளர்களாக பங்கேற்று நான்கு நாள் புத்தாக்கப் பயிற்சியை நடத்தினர்.  
  இறுதியாண்டு மாணவ, மாணவியர் தங்களை நேர்காணல் மற்றும் வேலைவாய்ப்புக்கு தயார்படுத்திக் கொள்ளுதல், எழுத்துத் தேர்வினை எதிர்கொள்ளும் முறை, பணிசார்ந்த அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துதல், குழு கலந்துரையாடல், மாணவியரின் பொருளாதார தன்னிறைவு, சமூகத்தில் மாணவியரின் பாதுகாப்பு போன்றவைகள் பற்றி பயிற்சியளிக்கப்பட்டது. மேலும், மனதை ஒரு நிலைப்படுத்தும் யோகா, சிந்திக்கும் திறன் அதிகரித்தல், நேரம் தவறாமை, நேர்மறை எண்ணம் வளர்த்தல், திட்டமிடுதல் போன்றவை குறித்தும் விளக்கிப் பேசினர்.
  தனித் திறமைகளை வளர்க்க பாடல், நடனம், கவிதை, நாடகம் போன்றவற்றில் மாணவர்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டன.  இப்புத்தாக்கப் பயிற்சியில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் எஸ்.சுமதி உள்ளிட்ட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai