சுடச்சுட

  

  பெற்றோர் சொல் கேட்போம்: பள்ளி மாணவியர் உறுதிமொழி ஏற்பு

  By DIN  |   Published on : 03rd January 2019 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு  அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு, மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆரோக்கிய ஜான்சி தலைமை வகித்தார். புத்தாண்டையொட்டி, பெற்றோர் சொல் கேட்போம், படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்ப்போம் என  மாணவியர் உறுதிமொழி எடுத்துக்
  கொண்டனர்.
  காவல் ஆய்வாளர் மாணவியரிடம் பேசும் போது, 18 வயது நிரம்பிய  ஆண் மற்றும் பெண்களுக்கு சட்டங்கள் சார்ந்த  விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்டங்களை மீறுபவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வி காலங்களில் மாணவியரான நீங்கள் படிப்பில் மட்டுமே முழுக்கவனம் செலுத்த வேண்டும். செல்லிடப்பேசிகளில் தேவையற்ற படங்களையும், வீடியோக்களையும், பதிவுகளையும் பதிவேற்றுவதை தவிர்க்க வேண்டும். அறிமுகமில்லாத நபர்களிடம் செல்லிடப்பேசி எண்களை வழங்கக் கூடாது. தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.
  தற்போதைய சட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ளன. பதினெட்டு வயதுக்குள்பட்ட பெண்களுக்கும், ஆண்களுக்கும்  பிரச்னை செய்பவர்கள்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai