அரசு மகளிர் கல்லூரியில் பொன்விழா ஆண்டு: கேக் வெட்டி கொண்டாட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:55 AM | Last Updated : 04th January 2019 08:55 AM | அ+அ அ- |

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பொன்விழா ஆண்டு வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் பொன்விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் சுகுணா தலைமை வகித்தார். கல்லூரி துவங்கி 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் 150 கிலோ எடையளவுள்ள கேக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது.
காலை நேர வகுப்பு மற்றும் மாலை நேர வகுப்பு மாணவியர்கள் சேர்ந்து பகல் 12 மணிக்கு கேக் வெட்டினர்.
தொடர்ந்து மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பேராசிரியர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.