சுடச்சுட

  

  கேரள அரசுக்கு எதிராக போராட்டம்: காவல் துறை அனுமதி அளிக்க கோரிக்கை

  By DIN  |   Published on : 05th January 2019 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அழைத்துச் சென்ற கேரள அரசைக் கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து பாஜக மகளிரணி மாநிலச் செயலர் எஸ்.ரோகிணி,  பாஜக மாவட்டத் தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி,  முன்னாள் தலைவர் வழக்குரைஞர் கே.மனோகரன் மற்றும் நிர்வாகிகள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:  சபரிமலை ஐயப்பப் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் எச்சரிக்கையையும் மீறி 2 பெண்களை சபரிமலை சன்னிதானத்துக்குள் அழைத்துச் சென்றனர்.  இந்து மக்களின் மன உணர்வுகளை மதிக்காமலும்,  ஆண்டாண்டு காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஆகம விதிகளைச் சீர்குலைக்கும் நோக்கிலும் கேரள அரசு இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளது. 
   இதனால் கேரள அரசைக் கண்டித்து பாஜக,  இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கருப்புக்கொடி கட்டி மத உணர்வுகளை வெளிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.  இதற்கு காவல் துறை அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai