சுடச்சுட

  

  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நாமக்கல் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. 
  ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பி.ரவி தலைமை வகித்தார்.  பொருளாளர் எ.பாஸ்கர் முன்னிலை வகித்தார்.  செயலர் எம்.பழனிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் கு.ராஜேந்திர பிரசாத்,  துணைத் தலைவர் இளவேந்தன் உள்ளிட்டோர் பேசினர். 
  ஆர்ப்பாட்டத்தில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு அளிக்கும்  முடிவை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். 
  இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி உடனடியாக வாரிசுப் பணி வழங்க வேண்டும்.  இருசக்கர வாகன கடன் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பங்கேற்றனர்.  சங்க மாவட்ட துணைத் தலைவர் வேலு நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai