சுடச்சுட

  

  ஊதிய முரண்பாட்டை களைய உதவி வேளாண்மை அலுவலர்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 06th January 2019 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஒரே பதவி நிலையில் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என உதவி வேளாண்மை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ந. சேகர் தலைமையில் நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. செயலர் கே.ஏ. சிவக்குமார், பொருளாளர் பி. மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் ரா. அருள், முன்னாள் தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் பேசினர்.
  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணி குறித்து தோட்டக்கலை இயக்குநர் மாதந்தோறும் செயல்திறன் அறிக்கை கோருவதை கைவிட வேண்டும். உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி விதை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், துணை தோட்டக்கலை அலுவலர்களுக்கு உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
  2009-இல் பணியில் சேர்ந்த உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்களுக்கும், இதே பணியிடத்தில் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். வேளாண்மைத் துறையில் உள்ளதுபோல் பயிர் அறுவடை பரிசோதனை தற்காலிக பணியாளர்களை தோட்டக்கலைத் துறையிலும் வழங்க வேண்டும். வேளாண்மைத் துறையில் கூடுதல் எண்ணிக்கையில் பயிர் அறுவடை பரிசோதகர்களை நியமிக்க வேண்டும்.
  தோட்டக்கலைத் துறை பண்ணைகளில் வழங்கப்படும் பழக்கன்றுகளை தரமானதாக வழங்க வேண்டும். பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டப் பணிகளை மேற்கொள்ள வட்டாரத்துக்கு ஒரு உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்தை உருவாக்க வேண்டும்.
  சிறப்பாக பணியாற்றும் உதவி, துணை வேளாண்மை, தோட்டக்கலை, விதை அலுவலர்களை கெளரவப்படுத்தி குடியரசு தின விழாவில் சான்றிதழ் வழங்க வேண்டும். பயிர்காப்பீட்டு திட்டத்தில் உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும்.
  பயிர் காப்பீடு திட்டத்துக்கு என தனியாக காப்பீட்டு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும்.
  உதவி வேளாண்மை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கணினி பழுதடைந்துள்ளதால், அதனை திரும்ப பெற்றுக்கொண்டு புதிதாக மடிக்கணினி, இணையதள வசதியுடன் வழங்க வேண்டும்.
  விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகளை ரூ.2,000-க்கு குறையாமல் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். ரூ.100-க்கு கூட இப்போது நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. விதை சுத்திகரிப்பு பணி, சான்றிதழ் அட்டை பொருத்தும் பணிக்கு கூலியாக கடந்த 18 ஆண்டுகளாகவே கிலோவுக்கு 60 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்த கூலிக்குப் பணியாளர்கள் கிடைப்பதில்லை.
  இதனால், இந்தத் தொகையை கிலோவுக்கு ரூ. 3 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai