சுடச்சுட

  

  சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் குறைகேட்புக் கூட்டத்தை உடனடியாக நடத்தக் கோரிக்கை

  By DIN  |   Published on : 06th January 2019 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  நாமக்கல் மாவட்டத்தில் 16 மாதங்களாக நடத்தப்படாமல் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் குறைகேட்புக் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் க. சிதம்பரம் தலைமையில் நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை சங்கம் மூலம் வழங்குவது, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மட்டும் தனி பந்தல் அமைத்து கெளரவப்படுத்த வேண்டும்.
  மொழிப்போர் தியாகிகளை தனிப் பந்தலில் அமர வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி அதில் நாமக்கல் மாவட்டத்தின் அருங்காட்சியகம் வைக்க வேண்டும். இதில் நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் உருவப் படத்தையும் வைக்க வேண்டும்.
  சங்கத்துக்கு அலுவலகம் வைத்துக் கொள்ள ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசுகள் குறைகேட்பு கூட்டம் 9.8.2017-இல் நடத்தப்பட்டது. அதன்பிறகு 16 மாதங்களாக இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. குறைதீர்வு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என சங்கம் சார்பில் பல முறை கோரிக்கை மனுவும் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆட்சியர் காலாண்டுக்கு ஒருமுறை தவறாமல் கூட்டத்தைக் கூட்டி குறைகளைக் கேட்டுக் குறைகளை நிவர்த்தி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai