சுடச்சுட

  


  ராமாபுரம் மேட்டுவளவில் குடிசை வீட்டில் பிடித்த தீப் பரவி இரு குடிசைகள் முற்றிலும் எரிந்தன.
  மேட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பழனிக்குமார் (27) தறித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (23). இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். கவிதாவின் தங்கை அனிதாவும், அவரது கணவர் ஜெயக்குமாரும் இவர்களது வீட்டை ஒட்டிய கூரை வீட்டில் வசித்து வந்தனர்.
  வெள்ளிக்கிழமை இரவு 11 மணி அளவில் அனிதாவின் வீட்டிலிருந்து கரும்புகை எழுந்தது. இதைத் தொடர்ந்து வீடு தீப்பிடித்து எரியத் துவங்கியது. இந்த தீ கவிதாவின் வீட்டிலும் பிடித்தது. இதுகுறித்து திருச்செங்கோடு தீயணைப்புத் துறைக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
  ஆனால் அதற்குள் வீட்டிலிருந்த பொருள்கள் சாம்பலாகின. மல்லசமுத்திரம் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai