சுடச்சுட

  

  ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி துவக்க விழா அண்மையில் நடைபெற்றது.
  நாமக்கல் மாவட்டத்தில் முதன் முறையாக ஆர். புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்புக்கு தொழிற்கல்வி பள்ளிக் கல்வி துறையின் சார்பில் வழங்கப்படுகிறது. 
  இதன் தொடக்க விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் மு.ஆ. உதயக்குமார் தலைமை வகித்தார். 
  நாமக்கல் மாவட்ட கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியண்ணன் கலந்து கொண்டு தொழிற்கல்வி படிப்பை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்துப் பேசுகையில்,  தொழிற்கல்வியின் முக்கியத்துவம், பயிற்று முறை போன்றவற்றையும், 9-ஆம் வகுப்பிலேயே தொழிற்கல்வியைப் பயில்வதால் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருங்காலங்களில் அரசு வேலைக்கும், தனியார் வேலைக்கும் செல்ல உகந்ததாக இருக்கும் என்பதை விளக்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai