சுடச்சுட

  

  நாமக்கல் ஒன்றிய பாஜக சார்பில் மஹாசக்தி கேந்திர மாநாடு

  By DIN  |   Published on : 07th January 2019 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் ஒன்றிய பாஜக சார்பில் மஹாசக்தி கேந்திர மாநாடு வகுரம்பட்டி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
  பாஜக எஸ்.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சி. குப்புசாமி தலைமை வகித்தார். ஒன்றியத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் தாவூத் வரவேற்றார்.
  கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்டச் செயலர் துரைராஜ் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர், பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.  கல்வியாளர் பிரிவு தருமபுரி மாவட்டத் தலைவர் ஆர். பிரணவகுமார், மத்திய அரசு திட்டங்கள் குறித்துப் பேசினார்.
  முன்னதாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் வாக்குச் சாவடி முகவர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வாக்குச்சாவடி பொறுப்பாளர் அக்பர் பாட்சா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai