சுடச்சுட

  

  ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

  By DIN  |   Published on : 07th January 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை சார்பில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை,  விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் என்.கே.எஸ். சக்திவேல் தலைமை வகித்தார். மரகதம் சண்முகம், அறக்கட்டளை இயக்குநர் விஜயகுமாரி  முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி வரவேற்றார்.
  நிகழ்ச்சியில் சக்தி கல்வி, கலாசார அறக்கட்டளை தலைவர் என்.கே.எஸ். சக்திவேல் பேசியது:
  ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்தி, கல்வி கலாசார அறக்கட்டளை சார்பில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம். மருத்துவ உதவி, மாதம் ரூ. 500 உதவித்தொகை தருகிறோம்.
  அறக்கட்டளை சார்பில் பணி வாய்ப்பு ஏற்படுத்தி தரவும்,  அரசின் இலவச வீட்டுமனை பெற அனைத்து முயற்சிகளும் செய்து தர தயாராக உள்ளோம் என்றார்.
  நிகழ்ச்சியில் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பரமேஸ்வரி, சத்யபாமா, சரவணன், நாமக்கல் பகுதி ஒருங்கிணைபாளர்கள் தாரகேஸ்வரி, யசோதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai