கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நாமக்கல் அருகே அணியாபுரம் பார்க்வியூ பள்ளியில் சங்கத் தலைவர் எஸ்.கே. வேல் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செயலர் செல்ல.ராசாமணி, பொருளாளர் பி.காமராஜ், இணைச் செயலர் கே. அசோகன் உள்ளிட்டோர் பேசினர். மேலும் கோரிக்கைகள் குறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகள் பேசினர். 
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுத்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குரைஞர் சங்கங்களின் செயல்பாடுகளிலும், சங்கத்தின் தேர்தல்களிலும் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பார் கவுன்சிலின் இத்தகைய செயல் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. உரிமையியல் வழக்குகளில் போலீஸ் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து செய்வதையும், வழக்காடிகள் சார்பில் காவல் நிலையம் செல்லும் வழக்குரைஞர்கள் மீது பொய் வழக்கு போடுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். 
 நீண்ட நாள் கோரிக்கையான காஞ்சிபுரம், அம்பத்தூர் கீழமை நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டித்தர உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டமைப்பின் பதவிக் காலம் முடிவடையவுள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகளை கையாளுவதற்கு தலைவருக்கு முழு அதிகாரம்
அளிப்பது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com