மாவட்டங்களில் கட்டுமான தொழிலாளர்கள் நகரை ஏற்படுத்தக் கோரிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலாளர்கள் நகரை ஏற்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலாளர்கள் நகரை ஏற்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்க தமிழ்நாடு கட்டுமான, அமைப்புசாரா, விவசாய தொழிலாளர்கள் மத்திய சங்க மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சங்க மாநிலத் தலைவர் க. பொன் வேல்சாமி தலைமையில் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓய்வூதியம் ரூ. 1,000-த்திலிருந்து ரூ. 3,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் இலவச பயண அனுமதி அட்டை வழங்க வேண்டும்.
கட்டுமான தொழிற்பயிற்சி கூடங்களில் கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்களின் பிரதிநிதியாக கட்டுமான தொழிலாளி ஒருவரை நியமிக்க
வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 32 தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நலவாரிய பதிவுக்கு ஆதார் அட்டை மட்டும் இருந்தால்போதும் என அறிவிக்க வேண்டும்.
நலவாரிய பதிவுக்கு அரசு அதிகாரிகள் சான்றிதழ் அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் ஏதாவது ஒன்றை மட்டும் நடைமுறையாக்க வேண்டும். வருவாய் வட்டங்கள்தோறும் தொழிலாளர் நலவாரிய அலுவலகங்களை அமைக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலாளர்கள் நகரை ஏற்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.  ஆண்டுதோறும் கூலி உயர்வை முறையாக அறிவித்திட வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தின் கீழ் பதிவுபெற்ற கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களையும் இணைக்க வேண்டும்.
தமிழக கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர் நலத்துறை என தனித்துறை ஏற்படுத்தி அதற்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளில் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
கட்டுமான மூலப் பொருள்களான மணல், சிமென்ட், கம்பி, பெயிண்ட், மரம் போன்ற பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச் செயலர் எம்.பெருமாள், பொருளாளர் எ.கதிர்வேல், நாமக்கல் மாவட்ட செயலர் கே.பி.கந்தசாமி, தலைவர் விஜயா துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com