சுடச்சுட

  

  பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 
  இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூச்சாட்டி தரிசனம் செய்தனர். பரமத்திவேலூர் பேட்டையிலுள்ள பகவதியம்மன் கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
  அதைத் தொடர்ந்து 6-ஆம் தேதி வரை முக்கிய வீதிகளின் வழியாக வேல் எடுத்து அம்மன் ஊர் விளையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்களை தட்டுகளில் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தனர். பின்னர் பூக்களைக் கொண்டு அம்மனுக்கு பூச்சாட்டி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். செவ்வாய்க்கிழமை மாலை பொங்கல், மாவிளக்கு நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகின்றன.
  பாஜக ஆர்ப்பாட்டம்
  பரமத்திவேலூர், ஜன. 7: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் இரு பெண்களை அனுமதித்த கேரள அரசைக் கண்டித்து பரமத்தியில் பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தமிழகம் முழுவதும் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
   பரமத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கேரள அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்துக்கு பரமத்தி நகர பாஜக தலைவர் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் காந்தி, மாநில மகளிரணி செயலாளர் ரோகிணி, பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் மூர்த்தி, இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கோபி, தர்மசாஸ்தா அறக்கட்டளை தலைவர் அருள்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai