சுடச்சுட

  

  முத்தாயம்மாள் பாலிடெக்னிக்  மாணவர்கள் வாரியத் தேர்வில் மாநில சாதனை

  By DIN  |   Published on : 08th January 2019 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் கடந்த அக்டோபர் 2018-இல் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான வாரியத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
  இதில் ராசிபுரம் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
  இதில் தேர்வு எழுதிய முதலாம் ஆண்டின் முதல் பருவத்தில் 93 சதவிகித மாணவ மாணவியர் முழு தேர்ச்சி பெற்றனர். இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவத்தில் பயிலும் மின்னனுவியல் மற்றும் தகவல் தொலை தொடர்புத்துறை மாணவர் ஏ. ஆதிஷா, கணினித் துறை மாணவர் பி. திருக்குமரன் ஆகியோர் 700-க்கு 700 மதிப்பெண்  பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர். 
  மூன்றாம் ஆண்டு ஐந்தாம் பருவத்தில் மாணவர் எம். சீனிவாசன், ஜி.செல்வகுமார் 700-க்கு 699-ம், இரண்டாம் ஆண்டு  மூன்றாம் பருவத்தில் இயந்திரவியல் துறை மாணவர்கள் வி. சோமசுதர்தன், ஜி.அஜித்குமார், மின்னனுவியல் மற்றும் தகவல் தொலை தொடர்புத்துறை மாணவி பி.அகல்யா, மாணவர் ஆர்.கோகுல், சையத்ஹாசன், கணினித்துறை மாணவர் ஜெ.என்.பரத்குமார் உள்ளிட்டோர் 700-க்கு 698 மதிப்பெண்களும், மேலும் முதலாமாண்டில்  மூன்றாம் மற்றும் ஐந்தாம் பருவத்தில் 594 மாணவ மாணவியர் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
  முதலாமாண்டு முதல் பருவம் தகவல் தொழில் நுட்பத்துறை மாணவி பிரியதர்ஷினி 800-க்கு 782 மதிப்பெண்களும் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இதேபோல துறைவாரியாக மூன்றாம் ஆண்டு ஐந்தாம் பருவம் எலக்ட்ரானிக்ஸ் துறை 100 சதவீத தேர்ச்சியும், கணினி துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, ஆட்டோமொபைல் துறையில் 95 சதவீத தேர்ச்சிக்கு மேலும், சிவில் துறை, மெக்கானிக்கல் துறை, எலக்ட்ரிக்கல் துறையில் 90 சதவீத தேர்ச்சிக்கு மேலும், இரண்டாம் ஆண்டு  மூன்றாம் பருவத் தேர்வில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நூறு சதவீத தேர்ச்சியும், கம்ப்யூட்டர் துறை,  சிவில் துறை, மெக்கானிக்கல் துறை, எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 90  சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
  மூன்றாம் ஆண்டு ஐந்தாம் பருவம் மாநில அளவில் 700-க்கு 700 இரண்டு பேரும், 699-க்கு மேல் இரண்டு பேரும்,  695- க்கு மேல் 5 பேரும்,  690-க்கு மேல் 9 பேரும் மதிப்பெண்கள் பெற்றனர். இக் கல்லூரி கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து வாரிய தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் மற்றும் சிறப்பிடங்களைப் பெற்று சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai