குடிநீர் பிரச்னை: காலி குடங்களுடன் பெண்கள் ஆட்சியரிடம் முறையீடு

குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் முறையிட்டனர்.

குடிநீர் பிரச்னையை தீர்க்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் வந்து ஆட்சியரிடம் முறையிட்டனர்.
நாமகிரிப்பேட்டை வட்டாரம், தொ. பச்சுடையாம்பாளையம் அருகே குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்கள், காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை காலை திரண்டனர்.
இதுகுறித்து பெண்கள் கூறியது: குள்ளாண்டிக்காடு கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு 2 ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதில் ஓர் ஆழ்துளை கிணற்றில் மின்மோட்டார் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திடீரென பழுதானது. ஆனால், இதுவரை சரிசெய்யப்படவில்லை. அதேசமயம் காவிரி குடிநீரும் மிகக் குறைவான அளவே விநியோகம் செய்யப்பட்டு வருவதால், எங்கள் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகிறோம். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஆட்சியர் தலையிட்டு எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மேலும் இந்தக் கோரிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து பெண்கள் மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com