நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா

அரசின் சிறப்புத் திட்டமான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை நியாயவிலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள்

அரசின் சிறப்புத் திட்டமான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை நியாயவிலைக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்றுத் திட்டத்தைத் துவக்கி வைத்தனர்.
குமாரபாளையம் தொகுதி பள்ளிபாளையம் ஆவாரங்காடு நியாயவிலைக் கடை, திருச்செங்கோடு தொகுதி ராஜாகவுண்டம்பாளையம் நியாயவிலைக் கடை, பரமத்திவேலூர் தொகுதி பரமத்தி நியாயவிலைக் கடை, நாமக்கல்  தொகுதி மோகனூர் நியாயவிலைக் கடை, சேந்தமங்கலம் தொகுதி காந்திபுரம் நியாயவிலைக் கடை, ராசிபுரம் தொகுதி ராசிபுரம் நியாயவிலைக் கடை ஆகிய இடங்களில் இந் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். சுந்தரம், செல்வகுமாரசின்னையன், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் பாஸ்கர், சந்திரசேகரன், பொன். சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ. சரோஜா ஆகியோர் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை ரூ. 1,000 ரொக்கம் ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சிகளில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: தமிழக முதல்வர் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கம் வழங்க உத்தரவிட்டு இத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தனர். தலா ஒரு கிலோ பச்சரிசியுடன், ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ. 1,000 ரொக்கம் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இத் திட்டத்தின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 24 ஆயிரத்து 872 குடும்ப  அட்டைதாரர்களுக்கு ரூ. 59.14 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்றார் அவர்.  
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நாமக்கல் சார்-ஆட்சியர் கிராந்திகுமார்பதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பாலமுருகன், திருச்செங்கோடு கோட்டாட்சியர் பாஸ்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஃபர்ஹத்பேகம் உள்பட வட்டாட்சியர்கள், துணை பதிவாளர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com