நாமக்கல்லில் இளஞ்சிறார்களுக்கான இலவச சட்ட உதவி மையம் தொடக்கம்

சட்டத்திலிருந்து முரண்படும், பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் 18 வயதுக்குள்பட்ட இளஞ்சிறார்களை, சரியான பாதையில் வழிநடத்த இளஞ்சிறார் நீதிமன்றத்தில் சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என

சட்டத்திலிருந்து முரண்படும், பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் 18 வயதுக்குள்பட்ட இளஞ்சிறார்களை, சரியான பாதையில் வழிநடத்த இளஞ்சிறார் நீதிமன்றத்தில் சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும் சார்பு நீதிபதியுமான ஆர். கோகுலகிருஷ்ணன்.
18 வயதுக்குள்பட்ட சட்டத்துக்கு முரண்படுகின்ற குழந்தைகளுக்காக நாமக்கல்லில் இளைஞர் நீதிக் குழுமம் செயல்படுகிறது. மாவட்ட முதன்மை நீதிபதியின் அறிவுரையின்பேரில் நீண்ட கால நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, அவர்கள் சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாமக்கல்லில் உள்ள இளைஞர் நீதிக் குழும வளாகத்தில், இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
விழாவில் நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர். கோகுலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு, இளைஞர் நீதிக் குழும தலைவர் தனபால் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில் சார்பு நீதிபதி ஆர். கோகுலகிருஷ்ணன் பேசியது:
இனிவரும் காலங்களில் இந்த இலவச சட்ட உதவி மையமானது, நாமக்கல் இளைஞர் நீதிக் குழும வளாகத்தில் செயல்படும். இதன்மூலம் இளைஞர் வழக்குகள், பிணை பெறுவது, சட்ட ஆலோசனைகள் கிடைக்கும்.
சட்டத்திலிருந்து முரண்படும், பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படும் 18 வயதுக்குள்பட்ட சிறார்களை சரியான பாதையில் வழி நடத்த, இளஞ்சிறார் நீதிமன்றத்தில் சட்ட உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் 2 வழக்குரைஞர்கள் ஆலோசனைகள், வழக்கு நடத்துதல் உள்ளிட்ட சட்ட உதவிகளை அளிப்பார்கள். இந்த மையத்தில் இளைஞர் நீதிச் சட்டம்-2015 இன் படி, நீதிமன்றம், காவல் விசாரணை போன்ற சூழல் இல்லாமல், நீதிபதி, காவல் துறையினர், வழக்குரைஞர்கள் போன்றோர் சாதாரண உடையில் இருந்து கொண்டே 18 வயதுக்குள்பட்ட இளஞ்சிறார்களுக்கு சட்ட உதவிகளை அளிப்பார்கள்.
மேலும் அவர்களுக்கு உள்ள குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க இங்கு கலந்தாய்வு நடத்தி வழிகாட்டப்படும். இதனை இளஞ்சிறார்கள், பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், இளைஞர் நீதிக்குழும நாமக்கல் மாவட்ட உறுப்பினர்கள் தில்லை சிவக்குமார், பாரதி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தீ. ரஞ்சித பிரியா, நன்னடத்தை அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com