சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.
  நாமக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கோட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். செயலர் அன்பழகன், சுரேஷ், ஈஸ்வரன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர்.
  புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜி.டி.எஸ். ஊழியர்களுக்கு, துறை அந்தஸ்து வழங்க வேண்டும். கமேலஷ் சந்திரா கமிட்டியின், சாதகமான பரிந்துரையை 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். அலுவலகங்களை மூடுவதையும், ஆள் குறைப்பையும் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai