சுடச்சுட

  

  அரசுப் பள்ளிக்கு ரூ. 4 லட்சம் மதிப்பிலான சுகாதார வளாகம்

  By DIN  |   Published on : 09th January 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான சுகாதார வளாகம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளக்கல்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டிமுடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  சர்வதேச ரோட்டரி சங்க 2017-18-ம் ஆண்டின் நிதி திட்டத்தின் கீழ் வெள்ளக்கல்பட்டி நடுநிலைப் பள்ளியின் மாணவ, மாணவியர்களுக்கென சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பள்ளி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  இதில் பெண்கள், ஆண்களுக்கென தனித்தனியாகவும், மாற்றுத்திறளானிகளுக்கென தனி சுகாதார வளாகமும் ஒருங்கே அமைக்கப்பட்டுள்ளது. விழாவில், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் எல். சிவக்குமார் தலைமை வகித்தார்.
  பள்ளித் தலைமை ஆசிரியர் பி. சுந்தரம் வரவேற்றார். விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் நிர்மல் ஏ.பிரகாஷ், முன்னாள் மாவட்ட ரோட்டரி ஆளுநர்கள் தர்மேஷ் ஆர்.படேல், ஆர்.வாசு, மாவட்ட ரோட்டரி பவுன்டேஷன் சேர்மேன் பி.சிவசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆஸ்திரேலியா நாட்டின் ஆல்பர்ட் பார்க் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்த ஈஸ்வர் பிரசாத், வீரா பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சுகாதார வளாகத்தைத் திறந்து வைத்துப் பேசினர்.
  பின்னர் விழாவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. விழாவில் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் எஸ்.பிரகாஷ், முன்னாள் துணை ஆளுநர் கே. பாபு, ராசிபுரம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் என்.பி.ராமசாமி, கே. குணசேகர், ஆர்.சிட்டிவரதராஜன், எஸ். பாலாஜி, மோகன்ரங்கராஜன், நிர்வாகிகள் டி.வினோத், கதிரேசன், சுரேந்திரன், மணிமாறன், ஆர்.ரவி உள்ளிட்ட ரோட்டரி சங்கத்தினர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai