சுடச்சுட

  

  ஜன.24-இல் நாமக்கல்லில் நாட்டுக்கோழி வளர்ப்புப் பயிற்சி

  By DIN  |   Published on : 09th January 2019 08:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
  இதுகுறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் என். அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும், வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 24-ஆம் தேதி காலை 9 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. 
  பயிற்சியில் நாட்டுக்கோழி ரகங்கள், தீவன மற்றும் நோய் மேலாண்மை, அடை முட்டை பாதுகாக்கும் முறைகள் இளங்குஞ்சுகள் பராமரிப்பு குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி அட்டவணை, மூலிகை மருத்துவம் மற்றும் மரபுசாரா தீவனங்கள் பயன்பாடு குறித்துப் பயிற்சி அளிக்கப்படும். இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது 042860- 266144,  266345,  266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 23-ஆம் தேதிக்குள் பெயரை கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணைக் கண்டிப்பாகப் பதிவு செய்ய வேண்டும்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai