சுடச்சுட

  

  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழுக் கூட்டம்

  By DIN  |   Published on : 09th January 2019 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கபிலர் மலை ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் பொத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  கபிலர்மலை ஒன்றியத் தலைவர் மணிவண்ணன் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். மகளிர் அணி அமைப்பாளர் சந்திரகாந்தா வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
  கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் சங்கர் தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் முருக. செல்வராசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு இயக்க உரையாற்றினார்.
  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: வட்டார கல்வி மற்றும் வட்டார வளமைய அலுவலகப் பணிகளில் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்துவதை கைவிட்டு கல்வி நலன், மாணவர் நலன் காக்க வேண்டும். கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது அவரது சொந்த வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  கபிலர்மலை வட்டாரக் கல்வி அலுவலர் மாதந்தோறும் ஆசிரியர் சங்கத்தினருடன் கல்வி ஆலோசனைக் கூட்டம் நடத்திட வேண்டும்.
  பெண் ஆசிரியர்களை தொடக்கக் கல்வித் துறையில் இருந்து சமூக நலத்துறையில் உள்ள பல்வேறு அயல் பணிக்களுக்காக மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கபிலர்மலை ஒன்றிய பொருளாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai