சுடச்சுட

  

  திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு இருநாள் பயிற்சி வகுப்பு

  By DIN  |   Published on : 09th January 2019 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செங்கோடு வட்டாரத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இருநாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
  பயிற்சியை நாமக்கல் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் வரதராஜ் தலைமை வகித்து விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சாவித்திரி மண்ணில் கலர்அமில நிலை சீர்திருத்தம் பற்றி விளக்கமாகக் கூறினார். 
  மேலும் வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயமணி மண்வள அட்டை இயக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு குறித்தும், உயிர் உரங்களின் முக்கியத்துவம் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றியும், எடுத்துரைத்தார்.
  மேலும் வேளாண்மை அலுவலர்கள் ராதாமணி, ஜெயக்குமார், கவிதா சுதா, அன்புச்செல்வி, தனம் ஆகியோர் மண்ணில் உள்ள சத்துகள் பற்றியும் ஆய்வின் முக்கியத்துவம் பற்றியும் மண் மாதிரி எடுக்கும் முறை மற்றும் மண் ஆய்வின் பயன்கள் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறினர். பின்னர் பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மண் மாதிரி எடுக்கும் முறை பற்றி செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai