சுடச்சுட

  

  பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 09th January 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசைக் கண்டித்து பரமத்திவேலூரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் காமராஜர் சிலை முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  இந்திய தொழிற்சங்க மைய மாவட்டப் பொருளாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். தொலைதொடர்பு ஊழியர் சங்க பரமத்திவேலூர் கிளைச் செயலாளர் ரமேஷ், வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த குமரேசன், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டச் செயலாளர் வேலுசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
  அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ரயில்வே, காப்பீடு, பாதுகாப்பு ஆகிய துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகளை மத்திய அரசு ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
   இதில் அரசு ஊழியர் சங்க முன்னால் செயலாளர் இளங்கோவன், போக்குவரத்து ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். தொலைதொடர்பு ஊழியர் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai