சுடச்சுட

  

  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு

  By DIN  |   Published on : 09th January 2019 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ளலாம்.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு. ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் 18 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் பதிவு செய்து கொள்ளும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
  இந்த வகையில், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கண்பார்வை இழந்தோர், காது கேளாதோர், உறுப்பு நலன் குறைந்தவர்கள் மற்றும் இதர மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன்னுரிமை பிரிவில் பதிவு செய்து கொள்ளலாம்.  
   இச் சிறப்பு பிரிவு மூலம் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை, அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு பரிந்துரை, தொழில் நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை, சுயத்தொழில் வழங்குவதற்கு ஆலோசனை, திறன் பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
  மேலும் ஏற்கெனவே சென்னை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், தங்கள் பதிவு அட்டை, கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து தங்கள் பதிவை சரிசெய்து கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai