புதிய மோட்டார் வாகன சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தைத் திரும்ப பெறக் கோரி நாமக்கலில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தைத் திரும்ப பெறக் கோரி நாமக்கலில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மோட்டார் வாகனத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் சிங்காரம் தலைமை வகித்தார்.
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் வாங்கிலி பொருளாளர் சீரங்கன், சிஐடியு மாவட்டச் செயலாளர் வேலுசாமி, ட்ரெய்லர் பணிமனை உரிமையாளர் சங்கச் செயலாளர் பன்னீர்செல்வம், நாமக்கல் மாவட்ட மோட்டார் சைக்கிள் மெக்கானிக் சங்கச் செயலர் ரவிக்குமார், நாமக்கல் அனைத்து மெக்கானிக் ஒர்க்ஷாப் உரிமையாளர் சங்கத் தலைவர் ஸ்ரீதர், நாமக்கல் மாவட்ட சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத் தலைவர் சந்திரசேகரன், பொருளாளர் ராமசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து உரிமையாளர்களும், மெக்கானிக் தொழிலாளர்களும் வேலை இழந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே இத் தொழிலை செய்யக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.  சுங்க கட்டணம், காப்பீட்டு கட்டணத்தைக் குறைக்க வேண்டும். வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றிதழ்கள் வழங்கும் உரிமத்தை தனியாரிடம் வழங்கும் முடிவை கைவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com