மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையைத் தடுக்கக் கோரி குமாரபாளையம் வட்டார மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . 

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனையைத் தடுக்கக் கோரி குமாரபாளையம் வட்டார மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . 
குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். சங்கத்தின் மூத்த நிர்வாகி ராஜு, செயலர் செந்தில், பொருளாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன் லைன் மருந்து வணிகத்தால் நாடு முழுதும் சுமார் 8 லட்சம் மருந்து வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், தூக்க மாத்திரை உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. தரமற்ற மருந்து பொருள்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரையில் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி ஆன்-லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. 
தொடர்ந்து, குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர். ரகுநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com