Enable Javscript for better performance
காவிரியில் மீன் பிடித்தவர் ஆற்றில் தவறி விழுந்ததில் சாவு- Dinamani

சுடச்சுட

    

    காவிரியில் மீன் பிடித்தவர் ஆற்றில் தவறி விழுந்ததில் சாவு

    By DIN  |   Published on : 10th January 2019 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமத்தி வேலூர் காவிரி பாலத்துக்கு கீழ் அமர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த தொழிலாளி, தவறி காவிரி ஆற்றில் விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தார்.
    கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குருசாமி மகன் தங்கவேல் (55), கூலித் தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றுப்பாலத்துக்கு கீழ் அமர்ந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக காவிரி ஆற்றில் தவறி விழுந்ததில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீஸார் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் தேடி வந்தனர். இந்த நிலையில், புதன்கிழமை மாலை பாலப்பட்டி அருகே உள்ள களிமேடு பகுதி காவிரி ஆற்றில் மிதந்து வந்த தங்கவேலின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai