சுடச்சுட

  

  நாமக்கல் என்சிஎம்எஸ் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் புதன்கிழமை வழங்கினார்.
  நாமக்கல்லில் என்சிஎம்எஸ் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு என்சிஎம்எஸ் தலைவர் மின்னாம்பள்ளி நடேசன் தலைமை வகித்தார். நாமக்கல் வட்டாட்சியர் செந்தில்குமார், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் சேகர், என்சிஎஸ்எஸ் இயக்குநர்கள் சக்திவேல், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சரிதா வரவேற்றார். 
  விழாவுக்கு நாமக்கல் எம்.எல்.ஏ. கே.பி.பி.பாஸ்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.ஆயிரத்தை வழங்கினார். விழாவில் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai