சுடச்சுட

  

  சட்டையம்புதூர் அருள்மிகு பன்னாரி அம்மன் நடைபயணக்குழு சார்பில், மாரியம்மன் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.
  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலத்தில் எழுந்தருளியுள்ள பன்னாரி அம்மனுக்கு சட்டையம்புதூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து நடைபயணமாக பன்னாரி அம்மனை தரிசிக்க செல்வர். இந்நிலையில், புதன்கிழமை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தனர். அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai